#BREAKING: 2022-க்குப் பிறகு முதல்முறையாக… ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு..!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil) விலை ஒரு பேரலுக்கு 110 டாலரைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலையேற்றம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

தற்போது நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 150 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக இந்தியா போன்ற இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.