“உதயசூரியன் 176, கூட்டணி கட்சிகள் 58 சீட்”… தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளை கதிகலங்க வைத்த திமுக…. ஸ்டாலினின் புதிய அரசியல் கணக்கு….!

By Nanthini on பங்குனி 9, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது கடந்த தேர்தலை விட 3 தொகுதிகள் கூடுதலாகும். எஞ்சிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை திமுக தலைமை மேற்கொண்டு வருகிறது.

இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கணக்கிட்டு இடங்களை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையைச் சற்று குறைத்து வழங்க திமுக நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

புதிய வரவாக இணைந்துள்ள கட்சிகள் மற்றும் சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகளைப் பிரித்தளிப்பதில் திமுக முனைப்பு காட்டி வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்களின் செல்வாக்கிற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டணி கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 58 இடங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

   

இந்த கணக்கீடுகளின்படி, 2026 தேர்தலில் திமுக நேரடியாக 162 தொகுதிகளில் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இது கடந்த தேர்தலை விட 8 இடங்கள் குறைவானதாகும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 14 இடங்களைச் சேர்த்து, உதயசூரியன் சின்னத்தில் மொத்தம் 176 தொகுதிகள் போட்டியிடும் வகையில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தனிச்சின்னம் அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது.