உலகக்கோப்பை வெற்றிக்கு பின் ரொமான்ஸ்..! மைதானத்திலேயே காதலிக்கு முத்தமிட்டு கொண்டாடிய ஹர்திக் பாண்டியா… கேமராவில் சிக்கிய காட்சி வைரல்…!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை (2026) இறுதிப் போட்டி வெற்றியின் போது, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது காதலி மஹிகா சர்மா ஆகியோர் ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பைப் பகிர்ந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, தேசியக் கொடியைத் தோளில் போர்த்தியபடி ஹர்திக் பாண்டியா தனது மகிழ்ச்சியை மஹிகா சர்மாவுடன் கொண்டாடினார்.

மைதானத்தில் ரசிகருடன் செல்ஃபி எடுத்த பிறகு, மஹிகா சர்மா உணர்ச்சிவசப்பட்டு ஹர்திக் பாண்டியாவின் கன்னத்தில் முத்தமிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், இத்தொடர் முழுவதும் மஹிகா சர்மா மைதானத்திற்கு வந்து ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரொமாண்டிக் வீடியோ மற்றும் ஜோடியின் நடனம் இணையத்தில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.