நரேந்திர மோடி மைதானத்தில் அமித்ஷா! – குடும்பத்துடன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசிப்பு..!!

By Soundarya on பங்குனி 8, 2026

Spread the love

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்தினருடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வரும் நிலையில், மைதானத்தில் இருந்தபடி இந்திய வீரர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஆட்டத்தின் 10.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் சஞ்சு சாம்சனுடன் இணைந்து இஷான் கிஷன் விளையாடி வருகிறார். இந்தியாவின் இந்த அதிரடி ரன் குவிப்பு நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.