“நாக்கை அறுத்துருவேன் ஜாக்கிரதை” பிரேமலதாவை சீண்டினால் விபரீதம்; தேமுதிக பெண் நிர்வாகியின் பகீர் எச்சரிக்கை..!!

By Soundarya on பங்குனி 8, 2026

Spread the love

தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் மிகவும் ஆவேசமாகப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேமுதிகவையும், அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தையும் பற்றி யாராவது தவறாகப் பேசினால், அவர்களது நாக்கை அறுப்பேன் என்று அவர் அந்த வீடியோவில் மிகக் காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பிரேமலதாவைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்குக் கட்சியினர் அனைவரும் உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் பேச்சினால் ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் அல்லது வழக்குகள் வந்தாலும், அதைக் கட்சியின் வழக்கறிஞர் அணி பார்த்துக் கொள்ளும் என்று அவர் ஆவேசமாகத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.