இனி அலைய வேண்டாம்…!! நில ஆவணங்கள் இனி ஒரே கிளிக்கில்…! தமிழக அரசின் சூப்பர் டிஜிட்டல் வசதி… அதிரடி உத்தரவு…!!

By Devi Ramu on பங்குனி 8, 2026

Spread the love

தமிழகத்தில் நிலம் தொடர்பான ஆவணங்களை இனி பொதுமக்கள் மிகவும் எளிதாக இணையதளம் வாயிலாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய டிஜிட்டல் சேவைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ், ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ என்ற புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம் போன்ற முக்கிய ஆவணங்களை அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து பார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும், நிலத்தின் பட்டா மாற்றம் குறித்த முழுமையான வரலாற்றையும் அறிந்துகொள்ளும் வகையில், ‘பட்டா மாறுதல் விவர அறிக்கை’ எனும் புதிய சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மற்றும் என்ற இணையதளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சேவைக்கான கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50 மற்றும் செயலாக்கக் கட்டணமாக ரூ.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முறையான நில ஆவணங்களை மின்னணு முறையில் பாதுகாப்பாகப் பெற உதவும் இந்த வசதியை, நில உரிமையாளர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.