அதிமுக அவுட்.. விஜய் தான் டாப்…!! ஜோதிமணி பேச்சால் அதிர்ச்சியில் EPS…! தவெக தலைவருக்கு திருமாவளவன் விடுத்த ஓப்பன் சேலஞ்ச்…!!

By Devi Ramu on பங்குனி 8, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்றும், விஜய்யின் வருகை அந்த இடத்தைப் பூர்த்தி செய்யும் என்றும் அவர் கணித்துள்ளார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், விஜய்க்குச் சாதகமாகத் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருவது அரசியல் அரங்கில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

ஜோதிமணியின் இந்தக் கருத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்றும், கடந்த காலங்களைப் போல வெறும் சினிமா மயக்கத்தில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்கள் திட்டமிட்டு விஜய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும், தேர்தலுக்குப் பிறகே விஜய்யின் உண்மையான அரசியல் நிலைப்பாடு மற்றும் பலம் என்ன என்பது தெரியவரும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.