இந்த உலகில் தாயின் அன்பிற்கு நிகரான சக்தி எதுவுமில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று. வீட்டில் குழந்தையை பார்த்து கொள்ள யாரும் இல்லாததால், தான் பணிபுரியும் கட்டுமான இடத்திற்கே தனது கைக்குழந்தையை அந்த தாய் அழைத்து சென்றுள்ளார். ஒரு தோளில் பாரமான மூட்டைகளைச் சுமந்து கொண்டு, மறு கையில் குழந்தையைத் தாங்கிப் பிடித்து செய்யும் கடும் உழைப்பு காண்போரை உருக வைக்கிறது.
குழந்தை பசியால் அழுதுகொண்டிருக்கும் நேரத்திலும், வேலையை விட்டுவிட்டு அதைக் கவனிக்க முடியாத நிர்பந்தமான சூழலில் அந்தத் தாய் தவிக்கிறார். இருந்தபோதிலும், வறுமையின் காரணமாகக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமைக்காகத் தனது வலியையும், பசியையும் மறந்து அவர் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
— PulseNewsBreaking (@pulsenewsbreak) March 6, 2026
