ஆசிரியர் கனவில் இருப்பவரா நீங்கள்?… அரசு பள்ளிகளில் நிரந்தரப் பணி.. அரசாணையில் ஒளிந்திருக்கும் அந்த ‘ட்விஸ்ட்’ என்ன?… புதிய ரூல்ஸ் தெரியுமா?…!!!

By Rajeshwari on பங்குனி 7, 2026

Spread the love

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிகப் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணி நிரந்தரம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சட்டசபை அறிவிப்பின்படி, உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் இசை போன்ற சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகளில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டு பணி அனுபவத்திற்கும் 1.5 மதிப்பெண்கள் வீதம், அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சலுகையைப் பெறுவதற்கு சில முக்கிய நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது. குறிப்பாக, 2011-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித பணி இடைவேளையும் இன்றி தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த முன்னுரிமை பொருந்தும்.

   

மேலும், இந்த மதிப்பெண் சலுகையானது வரும் காலங்களில் நடைபெறவுள்ள அடுத்த 5 ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஆசிரியர் சமூகத்தினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.