காவல் காத்த நண்பர்களுக்கு நேர்ந்த கதி, காதல் விவகாரத்தில் இரட்டைக்கொலை… 24 மணிநேரத்தில் போலீஸ் அதிரடி…!!!

By Rajeshwari on பங்குனி 6, 2026

Spread the love

பீகார் மாநிலம் நவ்காச்சியாவில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த அஜேஷ் குமார் என்பவர் தனது காதலியைச் சந்திக்க நண்பர்களான குல்ஷன் மற்றும் நீரஜ் ஆகியோருடன் சென்றிருந்தார்.

மேலும் அஜேஷ் காதலியின் அறைக்குள் சென்றபோது, அவரது நண்பர்கள் வெளியே காவல் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் குடும்பத்தினர், அஜேஷை அந்தப் பெண்ணுடன் கண்டதால் ஆத்திரமடைந்து மூவரையும் பிடித்து அருகிலுள்ள வாழைத் தோட்டத்திற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர்.

   

இந்த கொடூரத் தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் குல்ஷன் மற்றும் நீரஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அஜேஷ் குமார் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். கொலையாளிகள் சடலங்களைச் சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடினர்.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நவ்காச்சியா காவல்துறை, தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டது. இதில் 24 மணி நேரத்திற்குள் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.