BREAKING: தவெக கூட்டணியில் இணையும் பெரிய கட்சி… சற்றுநேரத்தில் அதிகாரபூர்வ் அறிவிப்பு…!

By Soundarya on பங்குனி 5, 2026

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக), டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டணி அமைப்பது குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸும், திமுக கூட்டணியில் திருமாவளவனும் இணைந்ததால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, ராமதாஸ் இதுவரை தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், தைலாபுரத்தில் ஜி.கே. மணி மற்றும் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தவெகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்து வரும் நிலையில், பாமக-வின் இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. தவெக-வின் புதிய அரசியல் பயணத்திற்கு பாமக போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த கட்சியின் ஆதரவு முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.