எடப்பாடி போட நினைத்த ‘ஸ்கெட்ச்’.. முன்கூட்டியே முடித்த திமுக…கனிமொழி நடத்திய ரகசிய மூவ்….!

By Nanthini on பங்குனி 5, 2026

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் ஆளும் திமுக கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொகுதிப் பங்கீட்டை முடித்து, தேர்தல் பணிகளில் முன்னிலை பெற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக முனைப்பு காட்டி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முன்னதாக 41 தொகுதிகள் வரை காங்கிரஸ் எதிர்பார்த்த நிலையில், கனிமொழி மற்றும் சோனியா காந்தி இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவாகும் முன்பே அதிமுக-பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் தங்களது கூட்டணி மிகவும் இணக்கமாக இருப்பதை வெளிப்படுத்த அவர் விரும்பினார். ஆனால், அதிமுக தரப்பில் இன்னும் சில கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாததால், அந்தத் திட்டம் தாமதமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

திமுக கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது கூட்டணியில் உள்ள 21 கட்சிகளையும் சிதறாமல் தக்கவைத்து, தற்போதும் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து ‘அடித்து ஆடி’ வருகிறது. ஆனால் அதிமுக தரப்பில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் தற்போது கூட்டணியில் இல்லாதது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஸ்டாலினின் இந்த வேகமான நகர்வுகளுக்கு முன்னால், எடப்பாடி பழனிசாமி தற்போது அமைதி காத்து வருவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.