BIG BREAKING: திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதி… சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

By Soundarya on பங்குனி 4, 2026

Spread the love

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை ஒரு வழியாகச் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. நீண்ட நாட்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று (மார்ச் 4, 2026) மாலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, கூடுதலாக ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) இடத்தையும் காங்கிரஸிற்கு வழங்க திமுக தலைமை சம்மதித்துள்ளது. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தத் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதால், கூட்டணிக் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.