ஏட்டு ஐயா..! 18 வயசு ஆயிடுச்சு… “எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்கிறாங்க” தந்தை மீது புகார் அளித்த அப்பாவி வாலிபர்… !!

By Soundarya on பங்குனி 4, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்குத் திருமணம் செய்து வைக்கத் தந்தை மறுப்பதாகக் கூறி காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் நிலையத்தில் இருந்த அதிகாரியிடம், “தனக்கு 18 வயது ஆகிவிட்டது, எனவே தந்தையிடம் பேசித் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படிச் சொல்லுங்கள்” என அவர் விடாப்பிடியாகக் கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்ட அங்கிருந்த போலீசார், அந்த இளைஞனின் வினோதமான புகாரைக் கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் திகைத்துப் போயினர்.

 

   
View this post on Instagram

 

A post shared by राम भक्त भगवान दास (@ram_bhakt_bhagwandas_jal_yogi)

நிலைமையைப் புரிந்துகொண்ட காவல் அதிகாரி, “பெற்றோர் கடவுளுக்குச் சமமானவர்கள், அவர்களுக்கு எதிராகச் செயல்படக் கூடாது” என அந்த இளைஞனுக்குப் புரிய வைக்க முயன்றார். இருப்பினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கோரிக்கையில் அந்த இளைஞன் உறுதியாக இருந்த விதம் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.