2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரும் மார்ச் 5-ஆம் தேதியன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். தற்போது அதிமுக கூட்டணியில் நீடிக்கும் அவர், அக்கூட்டணியில் 10+1 தொகுதிகளைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்தத் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில், அவர் திமுகவுடனும் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.
திமுக தரப்பிலிருந்து புதிய தமிழகம் கட்சிக்கு ‘2 + 1’ தொகுதிகள் என்ற அடிப்படையில் ஆஃபர் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் விவாதித்து, எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்த இறுதி முடிவை கிருஷ்ணசாமி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
