விமானப் பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் திருவள்ளூர் திமுக நகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான அதிமுக நிர்வாகி தியாகு ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிப்ரவரி 25-ம் தேதி சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது, அங்கு பணியிலிருந்த 25 வயது விமானப் பணிப்பெண்ணிடம் இருவரும் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்தப் பணிப்பெண் டெல்லி விமான நிலைய அதிகாரிகளிடம் உடனடியாகப் புகாரளித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் மாற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, இருவரும் முறையாக ஆஜராக அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
