“எதுக்கு டி உனக்கு இவ்வளவு பூ”… 19 வயது இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய சைக்கோ கணவன்… ஜன்னல் வழியே காத்திருந்த பேரதிர்ச்சி….!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே படிப்பை தொடர விடாமல் கணவர் தடுத்ததால், கல்லூரி மாணவி திருமணமான மூன்றே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்கா நகரைச் சேர்ந்த விகாஸ் கண்ணன் என்பவருக்கும், கன்னங்காடு பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஷோபியாவிற்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஷோபியா, திருமணத்திற்குப் பிறகும் தனது படிப்பைத் தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

   

திருமணத்திற்குப் பிறகு ஷோபியா கர்ப்பமடைந்த நிலையில், இனி கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என விகாஸ் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கணவரின் எதிர்ப்பையும் மீறி ஷோபியா கல்லூரிக்குச் சென்று திரும்பியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ஷோபியா தனது அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் சடலமாகத் தொங்குவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

   

தகவலறிந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஷோபியாவின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஷோபியாவின் கணவர் விகாஸ் கண்ணன் ஒரு ‘சைக்கோ’ போல நடந்துகொண்டதாகவும், கல்லூரிக்குச் செல்லும்போது தலைநிறைய பூ வைப்பது உள்ளிட்ட சிறு விஷயங்களுக்குக் கூட டார்ச்சர் செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

 

திருமணமாகி மூன்றே மாதங்களில் பெண் தற்கொலை செய்துகொண்டதால், இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் கல்வி உரிமையைச் சிதைப்பதும், மனரீதியான சித்திரவதைகள் செய்வதும் எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது. விகாஸ் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தத் தற்கொலைச் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.