“ஈரான் அரசு என்னைக் கொன்றுவிடும்” கமேனி மரணத்தைக் கொண்டாடிய நடிகை உயிருக்குப் பயந்து கதறல்… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

By Soundarya on பங்குனி 3, 2026

Spread the love

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் அரசாங்கம் தன்னை கொன்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஈரானில் பிறந்த இவர், தனது 8 வயதிலேயே அங்கிருந்து வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் வசித்து வரும் இவர், பிரபல வெப் தொடரான ‘Sacred Games’ மற்றும் பல இந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

ஈரான் அதிபர் கமேனி மரணமடைந்ததை எல்னாஸ் நோரூசி கொண்டாடிய நிலையில், அந்நாட்டின் தற்போதைய அரசு கவிழும் வரை தான் அங்கு செல்லப் போவதில்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்ட அவர், இது 47 ஆண்டுகளாகத் தான் காத்திருந்த “மிகவும் அற்புதமான செய்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

   

ஈரான் அரசிற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக நடிகை கவலை தெரிவித்துள்ளார். மார்ச் 2, 2026 அன்று வெளியான தகவல்களின்படி, இந்த நடிகை தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளார்.