BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1200+ரூ.2000 பணம் வரவு.. தமிழக அரசு அதிரடி..!!

By Soundarya on பங்குனி 3, 2026

Spread the love

தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாத ஓய்வூதியம் பெறும் 29.29 லட்சம் முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு, வழக்கமான ரூ.1,200 உடன் ரூ.2,000 சிறப்பு நிதியாக சேர்த்து மொத்தம் ரூ.3,200 அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் நலிவு நிலையைப் போக்கவும் இந்த கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 5.92 லட்சம் பயனாளிகளுக்குத் தலா ரூ.3,500 உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்தத் திடீர் நிதி ஒதுக்கீடு, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்குப் பெரும் ஊக்கத்தையும், வாழ்வாதார உதவியையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.