பகீர்..! “11 நாட்களில் கல்யாணம்” கையில் மகளின் திருமண அழைப்பிதழ்… கண்களில் கண்ணீர்… பேருந்து முன் பாய்ந்த தந்தை… சிசிடிவியில் பதிவான கொடூரமான காட்சி…!!

By Soundarya on பங்குனி 2, 2026

Spread the love

ஹரியானா மாநிலத்தில் மகளின் திருமணப் பத்திரிக்கை வழங்கச் சென்ற தந்தை, ஓடும் பேருந்தின் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஹரியானா மாநிலம் ஹான்சி பகுதியைச் சேர்ந்த 60 வயதான தேவி சிங் என்பவரது மகளுக்கு, இன்னும் 11 நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழ்களை நேரில் சென்று அவர் வழங்கி வந்தார். கையில் திருமணப் பத்திரிக்கைகளுடன் சென்றவர், திடீரென இனம் புரியாத மனவேதனையில் யாரிடமோ தொலைபேசியில் பேசியவாறே, அங்கு வந்த ஹரியானா அரசுப் பேருந்தின் முன் குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். 

கண்களில் கண்ணீருடனும், கையில் திருமண அழைப்பிதழ்களுடனும் ஒரு தந்தை எடுத்த இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. திருமணக் கொண்டாட்டங்களுக்காகத் தயாராகிக் கொண்டிருந்த அந்த வீடு, தற்போது தந்தையின் பிரிவால் ஈடுசெய்ய முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளது. தற்கொலைக்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவில்லை; காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.