திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி, தற்போது ஒரு வெளிப்படையான விரிசலாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. இரு தரப்புமே தங்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதில் பிடிவாதமாக இருப்பதால், கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறிகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், ஹைதராபாத்தில் உள்ள ராகுல் காந்தியை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல்கள், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் தவெக-வுடன் கூட்டணி வைப்பது என்ற அதிரடி முடிவை எடுத்தால், காங்கிரஸுக்குள் இருக்கும் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தி அடையக்கூடும் எனக் கூறப்படுகிறது. தவெக-வுடன் கைகோர்க்கும் பட்சத்தில், கட்சியைப் பிளக்கக்கூடச் சிலர் தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் திமுக-காங்கிரஸ் உறவு முறியுமா அல்லது காங்கிரஸ் கட்சிக்குள் புதிய பிளவு ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது
