Bigg Boss Julie

பிக்பாஸ் ஜூலியை பத்தி ஏன் பேசறீங்க? அதுக்கு மட்டும்தான் ஒத்துப் போவீங்களா? – காமெடி நடிகர் கூல் சுரேஷ் ஆவேசம்!

By Elango on பங்குனி 2, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் கூல் சுரேஷ். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த காமெடி நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது, விஜய் பேசியதை தப்பா புரிஞ்சுகிட்டு ஜூலி அவங்க ஒரு கருத்து சொல்லி இருக்காங்க. அதுக்கு அவங்களை ரொம்ப தரக்குறைவா திட்டுறீங்க? அது ரொம்பவும் தப்பு. தயவு செஞ்சு பெண்களை திட்டாதீங்க. தயவுசெஞ்சு நீங்க யாருக்கும் சப்போர்ட் பண்ணாதீங்க.

நீங்க உழைச்சா தான் உங்களுக்கு சோறு. நம்ம பணத்துல அவங்க கார்ல பிளைட்ல பந்தாவா போறாங்க. தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் சொல்றது என்னெ்னா தயவு செஞ்சு உங்க குடும்பத்தை பாருங்க. அப்போ தான் நீங்க உருப்பட முடியும். ஒரு பெண் ஒரு கருத்து சொல்லும் போது உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போ நீங்க ஜால்ரா போடுற ஆளுங்களுக்கு மட்டும்தான் ஒத்துப் போவீங்களா? என்று நடிகர் கூல்சுரேஷ் கேள்வி எழுப்பி ஆவேசமாக பேசியிருக்கிறார்.