கடந்த 1980களில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும்தான் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்கள். அவர்கள் இருவரும்தான் நட்சத்திர ஹீரோக்கள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் அவர்கள் நடித்த படங்கள் எல்லாம் 50 லட்சம் 60 லட்சம் ரூபாய் என்கிற அளவில்தான் வியாபாரம் நடந்துள்ளது. ஏனெனில் அப்போது லட்சங்களில் தான் சினிமாவில் முதலீடும் வியாபாரமும் இருந்தது.
ஆனால் அந்த காலகட்டத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரமான முதல் திரைப்படம் நடிகர் கே பாக்யராஜ் நடித்து இயக்கிய தாவணிக்கனவுகள் படம் தான் என்பது பலரும் அறியாத உண்மை. இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் கே பாக்யராஜிடம் அப்போது உதவி இயக்குனராக இருந்த நடிகர் பார்த்திபனும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
