காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ். நெடுஞ்சாலை விடுதலை 2 அசுரன் படங்களில் நடித்த அவர் இப்போது யூத் என்ற படத்தை டைரக்ட் செய்து ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கென் கருணாஸ் கூறியதாவது, இன்னைக்கு நான் டைரக்டரா ஒரு படம் பண்ண காரணம் தனுஷ் மட்டும் தான். அதுதான் உண்மை. படிப்பை முடிச்சிட்டு நம்ம வாழ்க்கையில ஒரு கட்டத்துல என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருப்போம். நானும் அப்படி முழிச்சிட்டு இருந்தேன்.
அசுரன் படம் ஷூட்டிங் அப்போ தனுஷ்கிட்ட பேசுற வாய்ப்பு கிடைத்தது. அப்ப என்கிட்ட மேற்கொண்டு என்ன பண்ண போறேன்னு கேட்டார். சும்மா தான் இருக்கேன். என்ன பண்றதுன்னு தெரியலன்னு சொன்னேன். உங்கிட்ட திறமை இருக்கு. அசிஸ்டன்ட் டைரக்டரா ஜாயின்ட் பண்ணி ஒர்க் பண்ணு என்று சொன்னார். அவர் அன்னைக்கு சொன்ன வார்த்தை இன்னைக்கு நான் டைரக்டராக ஒரு படம் எடுத்து இருக்கேன். நான் அவருக்கு எப்போதுமே நன்றியோடு இருப்பேன் என்று கென் கருணாஸ் கூறியிருக்கிறார்.
