நடிகர் விஜய் தனது குடும்ப விழாக்களையும், பிள்ளைகளின் முக்கிய நிகழ்வுகளையும் தவிர்த்துவிட்டு, நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபாவின் 60-வது திருமண நாள் விழா மற்றும் தனது மகள் திவ்யா சாஷா பட்டம் பெற்ற நிகழ்வு ஆகியவற்றில் விஜய் பங்கேற்கவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக அவர் தனி விமானத்தில் சென்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் இந்த செயல், அவர் தனது குடும்பத்தை விட சக நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறாரா என்ற கேள்வியையும், அவரது சமூக அந்தஸ்து குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கின்றன.
இதற்கிடையில், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில், 2021-ஆம் ஆண்டு முதல் விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் இடையே இருக்கும் தொடர்பால் தங்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே கடந்த மூன்று ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசியலில் தடம் பதித்துள்ள விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் இத்தகைய புகார்களும் சர்ச்சைகளும் அவரது அரசியல் எதிர்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
