“த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல”.. அவரால தான் கல்யாணம் நின்னுச்சு…. கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா… வெளிவந்த அந்த ரகசியம்…!

By Nanthini on பங்குனி 1, 2026

Spread the love

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், சங்கீதா குறிப்பிடும் நடிகை த்ரிஷா தான் என இணையத்தில் வேகமான கருத்துக்கள் வலம் வருகின்றது. இந்நிலையில், பாடகி சுசித்ரா குறிப்பிட்டுள்ள விடயம் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா | Singer Suchitra Talks About Trisha Vijay Love

   

பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை திரிஷா மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்பது போன்ற அதிரடி புகாரை சுசித்ரா முன்வைத்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

   

அந்தப் பேட்டியில் பேசிய சுசித்ரா, நடிகை திரிஷா உண்மையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகளாகி இருக்க வேண்டியவர் என்று குறிப்பிட்டுள்ளார். திரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இடையில் நடக்கவிருந்த திருமணத்தை உதயநிதி ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை என்றும், அவரால்தான் அந்தத் திருமணம் நின்று போனது என்றும் சுசித்ரா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், திரிஷா உதயநிதி மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா | Singer Suchitra Talks About Trisha Vijay Love

திரிஷாவின் காதல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சுசித்ரா பேசியுள்ள இந்தத் தகவல்கள் அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் மற்றும் திரிஷாவை இணைத்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், சுசித்ராவின் இந்த புதிய கருத்துக்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. எனினும், திரிஷா தரப்பிலிருந்து இதற்கு இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலடி எதுவும் வரவில்லை.

சுசித்ராவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சைக் கேட்ட திரிஷாவின் ரசிகர்கள், அவர் ஆதாரமற்ற புகார்களைக் கூறி வருவதாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் நடக்கும் விவாகரத்துக்கள் அல்லது கிசுகிசுக்களைப் பற்றி சுசித்ரா தொடர்ந்து இது போன்ற அவதூறுகளைப் பரப்புவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது.