பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் கடந்த பிப்ரவரி 26 அன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நீண்ட நாட்களாக இவர்களது காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது இருவீட்டு பெரியவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த ஜோடி மணவாழ்க்கையில் இணைந்துள்ளது.
இந்த திருமணத்தில் தெலுங்கு மற்றும் ராஷ்மிகாவின் பூர்விகமான குடகு முறைப்படி சடங்குகள் நடைபெற்றன. குறிப்பாக, ராஷ்மிகா அணிந்திருந்த பழமை வாய்ந்த ஜூவல்லரி ரக நகைகள் மற்றும் ஆடை அலங்காரங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பிரம்மாண்ட திருமணத்திற்காக சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய தங்க நகைகளை ராஷ்மிகா அணிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல நகை நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள், மணமக்களின் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தன. உதய்பூரில் நெருக்கமானவர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்த நிலையில், திரைத்துறை நண்பர்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் வருகிற மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
