வாகனம் ஓட்டுபவர்களே உஷார்… இந்த போர்டை கவனிக்காவிட்டால் ஆபத்து நிச்சயம்… இதோ உண்மை பின்னணி…!!!

By Rajeshwari on மாசி 27, 2026

Spread the love

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது பச்சை அல்லது நீல நிறப் பலகைகளில் என்ற வாசகத்தைப் பார்த்திருப்பீர்கள். இது ஒரு முக்கியமான ‘தகவல் அளிக்கும் சாலைக் குறியீடு’ ஆகும். ‘லே-பை’ என்பது பிரதான சாலையிலிருந்து சற்று தள்ளி ஒதுக்கப்பட்டுள்ள ஒரு கூடுதல் அகலமான பாதையைக் குறிக்கிறது. இது குறிப்பாக லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட தூரம் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கவும், வாகனத்தில் ஏதேனும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டால் சாலையோரத்திலேயே நிறுத்தாமல் ஒதுங்கி நின்று சரிபார்க்கவும் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதி சாலைப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிவேக நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

   

இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக நடைபெறவும் லே-பை உதவுகிறது. சுருக்கமாகச் சொன்னால், இது லாரிகளுக்கான ஒரு பாதுகாப்பான தற்காலிக நிறுத்தமாகும். இனி நெடுஞ்சாலையில் இந்தப் பலகையைப் பார்த்தால், முன்னால் இடதுபுறத்தில் கனரக வாகனங்கள் ஓய்வெடுக்க ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.