ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், தெரியாமல் அவசர கால அபாயச் சங்கிலியை இழுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பயணி தனது பையைத் தொங்கவிடுவதற்கான கொக்கி என்று நினைத்து தவறுதலாக அபாயச் சங்கிலியை இழுத்துள்ளார்.
இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் அந்தப் பெட்டிக்கு விரைந்து வந்தனர். அதிகாரிகளின் விசாரணையின் போது, தனக்கு இது குறித்துத் தெரியாது என்றும், பையைத் தொங்கவிடவே இதை இழுத்ததாகவும் அந்த நபர் வெகுளித்தனமாகப் பதிலளித்தார்.
View this post on Instagram
“>
மேலும் ரயிலில் தேவையற்ற காரணங்களுக்காக அபாயச் சங்கிலியை இழுப்பது இந்திய ரயில்வே சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 141-ன் படி, முறையான காரணமின்றி சங்கிலியை இழுப்பவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வைரல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது போன்ற முக்கியமான இடங்களில் முறையான எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், சில நேரங்களில் தெரியாமல் நடக்கும் தவறுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ரயிலில் பயணிக்கும் போது தெரியாத உபகரணங்களை இயக்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
