ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன் கூறியதாவது, துரந்தர் படம் ஐக்கிய அரபு நாடுகளில் தடை செய்யப்பட்ட போது அந்த படத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் விமானம் பிடித்து இந்தியாவுக்கு கிளம்பி வந்தார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு இங்கே ஐபி டிவியில் பார்க்கும் வசதியும் இருந்தது. ஆனாலும் பெரிய திரையில் கண்டு களிக்க வேண்டும் என்று அவர்கள் பறந்து வந்தார்கள்.
அதே எதிர்பார்ப்பு தற்போது துரந்தர் 2 படத்திற்கும் உருவாகியுள்ளது. ஒரு படைப்பின் வெற்றிக்கு ரசிகர்கள் முக்கியமான காரணம். அவர்கள் சரியானதை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று நடிகர் மாதவன் ரசிகர்கள் குறித்து பேசியிருப்பது இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
