பள்ளிச் சீருடையில் இருந்த 10TH மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… பள்ளிப்பேருந்தை துப்பாக்கியுடன் வழிமறித்த கும்பல்… அடுத்து நடந்த சம்பவத்தின் பதைபதைக்கும் பின்னணி..!

By Soundarya on மாசி 27, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், பள்ளிப் பேருந்துக்குள் புகுந்து பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, சிபிஎஸ்இ (CBSE) பொதுத்தேர்வு எழுதிவிட்டு மீரட்-ஹாபூர் சாலையில் வந்து கொண்டிருந்த பி.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி பேருந்தை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பட்டப்பகலில் நடந்த இந்தத் தாக்குதலில் அந்த மாணவன் படுகாயமடைந்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் பேருந்துக்குள் நுழைந்து, ஜதின் என்ற மாணவனை சரமாரியாகத் தாக்கியது. அப்போது அவர்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் அந்த மாணவனைச் சுட முயன்றதாகவும், அதிர்ஷ்டவசமாக அந்தத் தோட்டா பாயவில்லை என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கி இயங்காததால், ஆத்திரமடைந்த கும்பல் துப்பாக்கியின் பின்பகுதியால் (butt) மாணவனைத் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு, அடுத்த தேர்வின் போது அவனைக் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டுத் தப்பியோடியது.

   

   

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பழைய முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் செல்லும் பேருந்திலேயே இத்தகைய வன்முறை அரங்கேறியிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.