அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவல், தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தீவிர ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது குறித்துத் தனது ஆதரவாளர்களிடம் விவாதித்த ஓ.பி.எஸ், மூன்று முறை மாநிலத்தின் முதல்வராக இருந்த தனக்கு அக்கூட்டணி செட் ஆகுமா என்ற தயக்கத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை தி.மு.க-வை நோக்கித் திருப்பியுள்ளதாகவும், அவரது ஆஸ்தான ஜோதிடர் கணித்தபடி இன்று அல்லது நாளை (பிப்ரவரி 28) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணையலாம் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
