காதலித்து கரம் பிடித்தவனே காலனான கொடுமை… இரயில் நிலையத்தில் அநாதையாகக் கிடந்த இளம்பெண்ணின் உடல்… வைரலாகும் காட்சி..!!!

By Rajeshwari on மாசி 26, 2026

Spread the love

பீகார் மாநிலம் மாதேபுரா இரயில் நிலையத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், மனிதநேயத்தின் மீதே ஒரு மிகப்பெரிய வினாக்குறியை எழுப்பியுள்ளது. நடைமேடையில் சலனமற்று கிடந்த தாயின் உடலுக்கு அருகில் நின்று, அவரது இரண்டு பிஞ்சு மகள்களும் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சைப் பதறவைத்தது.

இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முகமது முர்ஷித் என்பவரை காதலித்து கரம் பிடித்த காஜல் என்ற அந்தப் பெண், இன்று அதே கணவனால் வஞ்சிக்கப்பட்டு அநாதையாகக் கிடந்த அவலம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

   

“>

   

மேலும் குடும்ப உறுப்பினர்களின் தகவல்படி, தம்பதியினருக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக, முர்ஷித் காஜலை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், தனது குற்றத்தை மறைக்க காஜலுக்கு உடல்நலம் சரியில்லை என்று நாடகமாடி, அவரை மாதேபுரா இரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

 

அங்கு ‘மருத்துவரை அழைத்து வருகிறேன்’ என்று கூறிவிட்டு, அந்த இரண்டு குழந்தைகளையும் சடலத்தின் அருகிலேயே தவிக்கவிட்டு முர்ஷித் தப்பியோடியுள்ளார். பசியும் பயமும் கலந்த நிலையில், தங்களின் தாய் இறந்தது கூடத் தெரியாமல் அந்தக் குழந்தைகள் அழுதது, உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் குரூர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.