Actor Power Star Srinivasan

அண்ணன் தம்பியா இருப்போம்… ஆனால் திமுக ஆட்சிதான் நடக்கணும் – நடிகர் விஜய் குறித்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் விமர்சனம்!

By Elango on மாசி 26, 2026

Spread the love

கண்ணா லட்டு தின்ன ஆசையா யாயா கோலி சோடா ஐ நாரதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற் வந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனிடம், தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நடிகர் என்ற முறையில் அண்ணன் தம்பியாக இருப்போம். ஆனால் அரசியலில் மக்களுக்கு முன்னேற்றத்தை தருவது திமுக தான். தற்போது நல்லாட்சி நடக்கிறது. மீண்டும் அது தொடர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.