திடீர் திருப்பம்…. “விஜய்க்கு ஆதரவு”…. அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்…. காலையிலேயே தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

திருநெல்வேலியில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மண்டல அலுவலக கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடிகர் விஜயைப் பார்த்துப் பயப்படுவதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்களின் புழக்கம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகக் கடும் கண்டனம் தெரிவித்தார். தி.மு.க. அரசு எங்கும் ஊழல் மயமாகத் திகழ்வதாகவும், வரவிருக்கும் தேர்தலில் இந்த ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய தினகரன், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களையும் அமைச்சரவையில் பங்கையும் கோருவதால் தி.மு.க. கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், தொகுதிப் பங்கீட்டின் போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிருப்தியில் வெளியேறுவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், ஓ.பி.எஸ் அணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டமன்றத்திலேயே தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பேசியவர்களின் செயல்பாடுகளை உண்மையான தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

   

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. வழிகாட்டுதலோடு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கௌரவமான தொகுதிகளைப் பெற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என்று உறுதிபடத் தெரிவித்தார். மக்கள் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், பணநாயகத்தை நம்பி வெற்றி பெற்றுவிடலாம் என முதல்வர் நினைப்பதாகவும் அவர் சாடினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், தகுதியான வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றியை உறுதி செய்யப் போவதாகவும் தினகரன் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.