இந்தியாவில் 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது ஒரு பெண்மணி தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கண்டெடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கணவருக்குத் தெரியாமல் ரகசியமாகச் சேர்த்து வைத்திருந்த இந்தப் பணத்தை, பணமதிப்பிழப்பின் போது மாற்ற மறந்துவிட்டதால், தற்போது செல்லாத நோட்டுகளாக அவை கையில் இருப்பதைக் கண்டு அந்தப் பெண்மணி கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த நெகிழ்ச்சியான மற்றும் சங்கடமான தருணத்தை அவரது மகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “மம்மீ இப்போது அழுது கொண்டிருக்கிறார்” என்ற தலைப்புடன் வெளியான இந்த வீடியோ, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சேமிப்பு என்ற நோக்கத்தில் ரகசியமாக வைக்கப்பட்ட பணம், காலப்போக்கில் வெறும் காகிதமாக மாறியதைக் கண்டு அந்தப் பெண் வருந்துவதைப் பார்த்த நெட்டிசன்கள், நகைச்சுவையாகவும் ஆறுதலாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்நிலையில் “ரிசர்வ் வங்கிக்குச் சென்று பேசிப் பாருங்கள்” என்றும், “கணவரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது?” என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் பணமதிப்பிழப்பு காலத்தின் பழைய நினைவுகளையும், இந்திய இல்லத்தரசிகளின் ரகசியச் சேமிப்புப் பழக்கத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.
