நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், என்னை நடிக்க விடாமல் தடை போடுகின்றனர். என்னை முடக்குகிறார்கள். இல்லை என்றால் இன்னும் பல இயக்குனர்களை உருவாக்குவேன் என்று மேடையில் பேசியிருந்தார்.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியதாவது, நடிக்க படங்களில் வாய்ப்பே இல்லாத ஒரு நடிகர் இப்படி பேசினால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சீனியர் நடிகர்கள் சூர்யா சிம்பு தனுஷ் ஆகியோரை விட அதிக சம்பளமும் பெற்று வருகிறார். இப்படி இருக்கும் போது சிம்பதி கிரியேட் செய்வதற்காக இப்படி எல்லாம் அவர் மேடையில் இப்படி முடக்கறாங்க, தடுக்கறாங்க என்று பேசுவது முரண்பட்டதாக உள்ளது என்று பிஸ்மி அந்த வீடியோவில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
