இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் அரசன். கடந்த பொங்கலுக்கு முன்பு இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்தது. இதில் சிம்பு கலந்துக்கொண்டு பல காட்சிகளில் நடித்து முடித்தார். இப்போது 2வது ஷெட்யூல் மீண்டும் கோவில்பட்டியில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2வது வாரத்தில் ஷூட்டிங் துவங்குகிறது.
ஏற்கனவே அரசன் படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோகலட்சுமி ஆகியோர் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சமீபத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான மைலார்ட் படத்தில் நடித்த சைத்ராவும் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அரசன் படத்தில் 3 நாயகிகள் என்ற தகவல் உறுதியாகி உள்ளது.
