BREAKING: அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000… ஜெயலலிதா பிறந்தநாளில் இபிஎஸ் மெகா சர்ப்ரைஸ்…..!

By Nanthini on மாசி 24, 2026

Spread the love

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அதிரடியான 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த பாதிப்பில் இருந்து குடும்பங்களை மீட்டெடுக்க ‘கருணைத் தொகையாக’ ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தத் தொகை நேரடியாகக் குடும்பங்களின் கைக்கு வந்து சேரும் என உறுதி அளித்துள்ள அவர், பொருளாதார ரீதியாக மக்களைக் காப்பதே இந்த வாக்குறுதியின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.