actor Vijay

எந்த ஹீரோவும் அப்படி பண்ணியது இல்லே… ஆனால் விஜய் அப்படி செஞ்சார் – இயக்குனர் பரதன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

By Elango on மாசி 24, 2026

Spread the love

நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம் அழகிய தமிழ் மகன். அந்த படத்தை இயக்குனர் பரதன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் ஒரு விஜய் நல்லவராகவும் ஒரு விஜய் கெட்டவராகவும் இருப்பார். இந்த படத்துக்கு பிறகு வில்லு தி கோட் மெர்சல் கத்தி புலி என பல படங்களில் நடிகர் விஜய் இரட்டை ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிய தமிழ் மகன் படம் குறித்து இயக்குனர் பரதன் கூறியதாவது, தாடியோ மருவோ வேறு எந்த ஒப்பனையும் மாற்றமும் இல்லாமல் குரு – பிரசாத் என இருந்து கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார். 2 கேரக்டர்களுக்கான வித்தியாசத்தை வெறும் நடிப்பில் மட்டுமே காட்ட வேண்டும் என்பது பெரிய சவால். இந்த படத்தில் அந்த சவாலை விஜய் சார் மிகப் பிரமாதமாக திரையில் நிகழ்த்திக் காட்டினார் என்று இயக்குனர் பரதன் கூறியிருக்கிறார்.