விஜய் கட்சியுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. காலையிலேயே தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

By Nanthini on மாசி 24, 2026

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய ‘எம்ஜிஆர் அதிமுக’ கட்சி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் (தவெக) தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டி ராமச்சந்திரன் விஜய்க்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் எவ்வித நிபந்தனையுமின்றி தவெக-வை ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நேர்மையான மற்றும் ஊழலற்ற ஆட்சியை அமைய வேண்டும் என்பதே இந்த ஆதரவின் முக்கிய நோக்கம் என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அடங்கிய ‘எம்ஜிஆர் அதிமுக’-வின் இந்த முடிவு தவெக-விற்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றை இலக்கை முன்னிறுத்தி, ஒரு மாற்றத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த ஆதரவு அமைந்திருப்பதாக ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.