வேலூரில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தவெக தரப்பில் வெறும் 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி சீட்டுகள் (Pass) வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும், அனுமதி சீட்டு இல்லாத ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் தொண்டர்களும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குத் திரண்டதால் போலீசாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சற்று முன்பாக, அனுமதி சீட்டு இல்லாத ஏராளமானோர் அங்கிருந்த பாதுகாப்புத் தடுப்புகளை (Barricades) மீறி ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். இந்தத் திடீர் அத்துமீறலால் அங்கிருந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பெரும் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
