மத அடையாளத்தை மறைத்து முறைகேடாக வெற்றி.. செல்வப்பெருந்தகை பதவியை ராஜினாமா செய்யணும்… பாஜக வலியுறுத்தல்..!!

By Soundarya on மாசி 22, 2026

Spread the love

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தனது உண்மையான மத அடையாளத்தை மறைத்து முறைகேடாக அந்தத் தொகுதியில் போட்டியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக செல்வப்பெருந்தகையின் மகளது நிச்சயதார்த்தப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நாராயணன் திருப்பதி சுட்டிக்காட்டியுள்ளார். அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை மறைத்துவிட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று பொய்யான தகவலை அளித்து தேர்தலில் போட்டியிட்டது சட்டவிரோதமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

தெரிந்தே இத்தகைய குற்றத்தைச் செய்துள்ளதால், அவர் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.