தமிழ்நாட்டில் இன்று (பிப்., 22) ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆபரணத் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,680-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,440-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலக நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரி செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவு உலகளாவிய சந்தையில் எதிரொலிப்பதால், முதலீட்டாளர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் தங்கத்தின் விலை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
