தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் செல்கிறார். சமீபத்தில் சேலத்தில் நடந்த தவெக கூட்டத்துக்கு நடிகர் விஜய் நேரில் வருகை தந்தார். வருகிற 23ம் தேதி வேலூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
க்யூ ஆர் கோடு அனுமதி சீட்டு இருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்க பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று வேலூர் மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் இப்படி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது தவெக கட்சியினர் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
