தவெக நிர்வாகிகளுக்கு ஷாக்..! கட்சியிலிருந்து நீக்கம்… விஜய் கொடுத்த அதிரடி வார்னிங்…!!

By Soundarya on மாசி 21, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. கட்சியின் தலைவர் விஜய்யின் உத்தரவின்படி, 234 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமை மட்டுமே வெளியிடும் என்றும், மற்றவர்களின் அறிவிப்புகள் செல்லாது என்றும் தவெக தலைமை தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி யாராவது பணமோசடி அல்லது பிற முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்கள் உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று விஜய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இத்தகைய மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.