கழிவறையில் ரகசிய கேமரா… இன்ஸ்டாவில் இளம் நடிகையின் வீடியோ…. இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்….!

By Nanthini on மாசி 20, 2026

Spread the love

பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் தொடரில், பிரபல கன்னடத் தொலைக்காட்சி நடிகை ஒருவரின் அந்தரங்கத் தருணங்கள் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டு, அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 6 முதல் 8-ம் தேதி வரை கோரமங்களா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இத்தொடரில், 10 அணிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திரைத்துறை மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஷராவதி சக்திஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இருப்பினும், போட்டியின் இரண்டாம் நாளான பிப்ரவரி 7-ம் தேதியன்று நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம் தொடரின் மகிழ்ச்சியைச் சீர்குலைத்தது. 32 வயதான பாதிக்கப்பட்ட நடிகை மைதானத்தின் கழிவறைக்குச் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவருக்குத் தெரியாமல் செல்போனில் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் வாயிலாக நடிகையின் தோழிக்கு அனுப்பி, அது நடிகையின் கணக்கு எனத் தவறாக நினைத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

   

“உங்களுடைய மேலும் பல வீடியோக்கள் எங்களிடம் உள்ளன; பெரும் தொகை தர வேண்டும் அல்லது வீடியோ காலில் பேச வேண்டும், இல்லையெனில் இவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்” என்று அந்த மர்ம நபர் நடிகையை மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நடிகை, துணிச்சலுடன் பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி புகார் அளித்தார். ஆதாரங்களாக மிரட்டல் செய்திகள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவையும் அவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

   

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், வீடியோ எடுத்த நபர் மைதான ஊழியரா அல்லது வெளியாட்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் நடைபெறும் இதுபோன்ற பெரிய அளவிலான நிகழ்வுகளில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கேள்வியையும் கவலையையும் எழுப்பியுள்ளது.