பெரும் அதிர்ச்சி..! கிரிக்கெட் மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் நடுவர் பலி… 20 வீரர்கள் படுகாயம்…!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, எதிர்பாராத விதமாக தேனீக்கள் கூட்டம் மைதானத்திற்குள் புகுந்து வீரர்களையும் நடுவர்களையும் சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையில், கான்பூரைச் சேர்ந்த 65 வயதான நடுவர் மாணிக் குப்தா தேனீக்கள் கொட்டியதில் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் கான்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் நடுவர் உயிரிழந்தது மட்டுமன்றி, சுமார் 20-க்கும் மேற்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்கள் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தனர். கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர் இந்தத் துயரச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். விளையாடிக்கொண்டிருந்த போதே திடீரென நிகழ்ந்த இந்தத் தாக்குதல் மற்றும் நடுவரின் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.