“வேலையில்லாத என்னை நம்பி வராதே” என்று சொன்னேன்.. ஆனால் என் மனைவி சொன்ன அந்த வரத்தை… முதன்முறையாக மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தனது கிரிக்கெட் பயணத்தின் ஆரம்பகால போராட்டங்கள் மற்றும் தனது மனைவியின் அசைக்க முடியாத ஆதரவு குறித்து உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். “அப்போது என்னிடம் நிலையான வேலை கூட இல்லாததால், என்னை நம்ப வேண்டாம் என்றும் என்னுடன் வர வேண்டாம் என்றும் என் மனைவியிடம் கூறினேன். ஆனால், அவர்தான் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தார்” என்று வருண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வருணின் மனைவி அவரிடம், “நீங்கள் தாராளமாக கிரிக்கெட் விளையாடுங்கள், அதில் 5 முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்தாலே போதும்; நான் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன், நாம் இருவரும் சேர்ந்து குடும்பத்தை நிர்வகித்துக் கொள்ளலாம்” என்று ஊக்கப்படுத்தியுள்ளார். மனைவியின் இந்த ஊக்கமே இன்று அவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராக மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.