“10 ஆண்டுகளுக்குப் பிறகு பழம் நழுவிப் பாலில் விழுந்துள்ளது” திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பிரேமலதா நெகிழ்ச்சி..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

விஜயகாந்த் மற்றும் கலைஞர் கருணாநிதி இடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த பிரேமலதா விஜயகாந்த், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது “பழம் நழுவி பாலில் விழுந்தது போல” திமுகவுடன் கூட்டணி அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமக்குத் திருமணம் செய்து வைத்த கலைஞரின் ஆசியுடனும், கேப்டனின் விருப்பப்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்று பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த விருப்பத்தின் பேரிலேயே திமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்ததாக பிரேமலதா விளக்கம் அளித்தார். கருணாநிதி – விஜயகாந்த் ஆகிய இரு ஆளுமைகளுக்கு இடையிலான ஆழமான உறவே இந்த கூட்டணிக்கு அடிப்படை என்றும், இது வெற்றிகரமான கூட்டணியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த அரசியல் நகர்வு கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.